×

ரத்த களரியை தவிர்க்கவே தலைநகர் காபூலை விட்டு வெளியேறியதாக ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம்

காபூல் : ரத்த களரியை தவிர்க்கவே தலைநகர் காபூலை விட்டு வெளியேறியதாக ஆப்கன் அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.காபூலை தாலிபான்கள் சுற்றி வளைத்ததுமே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிவிட்ட அஷ்ரப் கனி, தமது மனைவி, குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான அதிகாரிகளுடன் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் ஆப்கனை விட்டு வெளியேறிய பிறகு முதன் முதலில் அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், தமது இருப்பிடத்தை பற்றி தெளிவுபடுத்தவில்லை. ரத்த கிளறியை தவிர்க்கவே காபூலை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்டுள்ள அவர், 60 லட்சம் பேர் வசிக்கும் காபூலில் கடந்த 20 ஆண்டுகளில் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள் வீணாகிவிட கூடாது என்று கருதியதாக விளக்கம் அளித்துள்ளார். ஆயுதப் போராட்டத்தில் தாலிபான்கள் வெற்றி பெற்று இருந்தாலும் ஆப்கானின் கவுரவம், பெருமை ஆகியவற்றை கட்டிக் காப்பதில் தான் அவர்களுக்கு உண்மையான சோதனை காத்திருப்பதாக அஷ்ரப் கனி கூறியுள்ளார்….

The post ரத்த களரியை தவிர்க்கவே தலைநகர் காபூலை விட்டு வெளியேறியதாக ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : ashraf kani ,kabulu ,Kabul ,President ,Taliban ,Ashraf Gani ,
× RELATED ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு